[X] Close

பல்வேறு விருதுகளை பெற்ற ஆரணி பட்டு சேலைகள் 


arani-silk-sarees

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 10:22 am
  • அ+ அ-

ஆரணி 

ஆரணியில் மிகவும் புகழ் பெற்ற ஆரணி பட்டு கூட்டுறவு சங்கமும், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கமும் உள்ளது. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பட்டு சேலை மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள் ளது.

தமிழகத்தில் பெரும்பாலும் கைத்தறி மூலமே பட்டு சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. தயாரிப் புக்கு தேவையான மூலப் பொருட் களான பட்டு ஜரிகை ஆகியவை போதுமான அளவில் கிடைப்ப தில்லை. கர்நாடகத்தில் பட்டு நூல் அதிகமாக கிடைக்கிறது. அதே போல சாதாரண ஜரிகை, வெள்ளி ஜரிகை ஆகியவை குஜராத் மாநிலம் சூரத்தில் அதிகமாக கிடைக்கின்றன இதுபோன்ற மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து வரவழைத்து தமிழகத்தில் தயாரிப்பதால் செலவும் அதிகமா கிறது. பட்டுச் சேலைகளில் பார்டர் டிசைன் உள்ளிட்டவை அதிகம் விரும்பப்படும் பட்டுச் சேலைகள். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, வாலாஜாபேட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தயாராகும் பட்டு சேலைகள் இந்தியாவில் அனைத்து மாநிலங் களிலும் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.

ஆரணியில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள் காஞ்சிபுரம், சென்னை, வேலூர் மற்றும் தமிழகத் தில் உள்ள பிற நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆரணி பட்டு சேலைக்கு என தனி மரியாதை உண்டு. ஆரணி பட்டு சேலைகள் ஒரு பக்கம் கரை, இருபக்க கரை பட்டு சேலை என இருவகையாக பிரிக்கலாம். இந்த பட்டுசேலை ரூபாய் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன ஆரணி பகுதியில் கைத்தறி பட்டு சேலை தயாரிப்பில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு சங்க உறுப்பினர் நெய்த சேலை தேசிய விருது பெற்றுள்ளது. மேலும், 2006-ம் ஆண்டு இதே சங்கத்தின் உறுப்பினர் பட்டுசேலை தமிழக அரசின் விருதைப் பெற்றுள்ளது. தற்போது, 2018-ம் ஆண்டு சிறந்த பட்டு சேலை கலைநயத்துடன் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார். மேலும், கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பாராட்டினார்.

ஆரணி பட்டு கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட சேலைகள் தமிழ அரசு விருது, கலைநயத்திற்கான விருதுகள் பெற்றுள்ளன. மேலும், பட்டு சேலைகள், கண்ணாடி கற்களை ஒட்டி டிசைன் செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.

ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சேவூர் ஜெ.சம்பத், அன்னை அஞ்சுகம் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், ஆகியோர் தங்களின் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள் பல்வேறு விருதுகள் வாங்கியதை பெருமையாக கூறினர். தமிழகத்தில் காஞ்சிபுரம், ஆரணி, வாலாஜாபேட்டை, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களில் தயாராகும் பட்டு சேலைகள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close