[X] Close

டாஸ்மாக் அபாரம்.. பட்டாசுக்கு மட்டும் அபராதம்!- எச்.ராஜா


h-raja-slams-tn-government-over-crackers-order

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 09:27 am
  • அ+ அ-

டாஸ்மாக் அபாரம், பட்டாசுக்கு மட்டும் அபராதமா என டாஸ்மாக் விற்பனையை சுட்டிக் காட்டி பாஜக தேசிய செயலர் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.

பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்த நிலையில் அதனை ஒட்டி தமிழகத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை மீறியதாக 2000-க்கு மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் பதியப்பட்டுள்ளன.

ஆரம்பத்திலேயே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த எச்.ராஜா தற்போது தமிழகத்தில் அரசாணையை மீறி பட்டாசு வெடித்ததாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையும் கண்டித்திருக்கிறார்.

அதனை ஒட்டியே "டாஸ்மாக் அபாரம்.. பட்டாசுக்கு மட்டும் அபராதம்!" என அவர் ட்வீட் செய்திருக்கிறார்.

டாஸ்மாக் விற்பனை ஜோர்:

இந்த 2018ம் வருடமும் தீபாவளித் திருநாளையொட்டி தீபாவளிக்கும் முந்தைய தினத்துக்கும் என இரண்டு நாட்கள் டார்கெட் வைத்தது டாஸ்மாக். 

கடந்த 2017ம் வருடம், 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல இந்த வருடம் (2018ம் வருடம்) தீபாவளி இரண்டு நாளில் 320 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த தீபாவளிக்கு இரண்டே இரண்டு நாளில், 330 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அதாவது, நிர்ணயித்த இலக்கை விட, 34.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்திருக்கிறது

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close