[X] Close

சர்கார் வசூலை விட ’சரக்கு’ விற்பனை விர்ர்ர்ர்ர் ; - ரெண்டே நாளில் 330 கோடிக்கு கல்லா


tasmac-sales

டாஸ்மாக் (கோப்புப்படம்)

  • வி.ராம்ஜி
  • Posted: 07 Nov, 2018 19:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

வருடம் தவறாமல் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி இந்த முறையும் இலக்கு நிர்ணயித்து, அதையும் தாண்டி வெற்றிகரமான விற்பனையைத் தொட்டிருக்கிறது டாஸ்மாக் சரக்குகள்.

பண்டிகைகள் வந்துவிட்டால், ஜவுளிக்கடை, ஸ்வீட் ஸ்டால் போல தமிழக அரசின் டாஸ்மாக் பிராந்தி ஷாப்பிலும் விற்பனைக்கு இலக்கு வைத்து வியாபாரம் செய்யப்படுவது வழக்கம்.

ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளைக் குறைத்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டே இன்னொரு பக்கம் நைஸாக கடைகளைத் திறந்துகொண்டிருக்கும் அரசையும் அந்தப் பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி நடக்கிற போராட்டங்களையும் பார்க்கலாம்.

இந்த நிலையில், கடந்த வருடங்களைப் போலவே இந்த தீபாவளிக்கும் டாஸ்மாக் அரசு மதுபானக்கடையில், விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதாவது, 2017ம் ஆண்டு, தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாட்களில், 200 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு என டார்கெட் செய்திருந்தார்கள். இந்த இரண்டு நாட்களில், கடந்த வருட தீபாவளியின் போது விற்பனை விர்ரென்று பறக்க, 224 கோடி ரூபாய்க்கு விற்றன சரக்குகள்.

அதேபோல இந்த 2018ம் வருடமும் தீபாவளித் திருநாளையொட்டி தீபாவளிக்கும் முந்தைய தினத்துக்கும் என இரண்டுநாட்கள் டார்கெட் வைத்தது டாஸ்மாக். வருடாவருடம் வயது ஏறுவது போல டாஸ்மாக் டார்கெட்டும் எகிறிக்கொண்டேதான் இருக்கிறது. கடந்த 2017ம் வருடம், 200 கோடி ரூபாய்க்கு விற்பனையாகவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல இந்த வருடம் (2018ம் வருடம்) தீபாவளி இரண்டுநாளில் 320 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அரசாங்கம் வேண்டுமானால் மக்களை ஏமாற்றலாம். ஆனால் ‘குடி’மகன்கள் அரசாங்கத்தை ஏமாற்றுவதே இல்லை. இந்த தீபாவளிக்கு இரண்டே இரண்டு நாளில், 330 கோடி ரூபாய்க்கு சரக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. அதாவது, நிர்ணயித்த இலக்கை விட, 34.5 சதவிகிதம் விற்பனை அதிகரித்திருக்கிறது எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக புள்ளிவிவரம் சொல்லுகிறது டாஸ்மாக்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close