[X] Close

சர்கார் மீது வழக்கு குறித்து ஆலோசனை ; அமைச்சர் சண்முகம் அறிவிப்பு


sarkar-case

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 19:18 pm
  • அ+ அ-

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய வகையிலான காட்சிகளை நீக்கவேண்டும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்ததாவது:

சர்கார் படத்தில் சில தேவையில்லாத காட்சிகள் சர்ச்சைக்கு உரிய வகையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது தேவையில்லாத வகையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும்.

மேலும் சர்கார் படம் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஆலோசனைக்குப் பிறகு சர்கார் மீது வழக்குப் பதிவது குறித்து முடிவெடுக்கப்படும். சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், நடிகர் விஜய், தியேட்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதியப்படும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close