குன்னூர்: குன்னூர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும்போதே வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து இழுத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள், அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அருவங்காடு குடியிருப்பு பகுதியில் வளர்ப்பு நாயை சிறுத்தை அடித்து இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில விநாடிகளில், அப்பகுதியில் மக்கள் நடந்து சென்றுள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிக்கு தொடர்ந்து வந்து செல்லும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.