[X] Close

‘பறவைகளைக் காக்க பட்டாசைத் தவிர்ப்போம்’: சரணாலய பகுதியில் வனத்துறை பிரச்சாரம் 


avoid-crackers

வெள்ளோடு சரணாலயப் பகுதியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பியுள்ள நிலையில், மையப்பகுதியில் உள்ள மரத்தில், வெள்ளை மலர்கள் போல் பறவைகள் அமர்ந்து ரம்மியமாய் காட்சியளிக்கிறது.

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 10:51 am
  • அ+ அ-

ஈரோடு 

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்க்க வலியுறுத்தி வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் வெள் ளோட்டில் உள்ள பறவைகள் சரணாலயம், 77 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். மாதக்கணக்கில் இங்கு தங்கி யிருந்து, இனப்பெருக்கம் செய்து மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு பறவைகள் திரும்பிச் செல்லும்.

கடந்த இரு ஆண்டுகளாக போது மான மழை இல்லாததால், பறவை கள் வருகை இல்லை. இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததாலும், கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் செல்வதாலும் வெள்ளோடு சரணாலய ஏரியில் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் பறவை கள் வருகையும் அதிகரித்தது.

தற்போது நீர் பறவைகளான வெள்ளை அரிவாள் மூக்கன், வண்ணநாரை, சாம்பல் நிற நாரை, சிறிய நீர் காகம், பெரிய நீர் காகம், நாமக்கோழி, முக்குளிப்பான், அலகு புள்ளி மூக்கு வாத்து ஆகியவை அடை காத்து வருகின்றன. அதே போல் மரங்களில் வாழும் பறவைகளான ஆள் காட்டி குருவி, தையல் சிட்டு, தேன் சிட்டு, வால் காக்கை போன்ற பறவைகளும் இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

இந்த பறவைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் தீபாவளி வெடிகளைத் தவிர்க்க வேண்டு மென வனத்துறையினர் விழிப் புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமை யில் அந்தியூரைச் சேர்ந்த செம்பருத்தி கலை குழுவினர், வெள்ளோடு மற்றும் சரணால யத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பறவைகள் பாதுகாப்பு குறித்து பாடல்கள் பாடியும், தீபாவளி வெடிகள் வெடிக்கமால் இருக்க வும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் விஜயகுமார், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வெள்ளோடு சரணா லயத்தை சுற்றியுள்ள சில கிராமங் களில், தீபாவளி பண்டிகையின் போது வெடிகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்ற னர். அவர்களை பாராட்டுவதோடு, அருகில் உள்ள மற்ற கிராமத்தவர்களும், பறவைகளைக் காக்க பாட்டாசுகளைத் தவிர்க்க வலியுறுத்தி வருகிறோம், என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close