[X] Close

நமது அம்மா பத்திரிகையை கேலி செய்த டிடிவி!- மன்னிப்பு கோர வலியுறுத்தும் அதிமுக


admk-seeks-apology-from-ttv

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Nov, 2018 10:25 am
  • அ+ அ-

நமது அம்மா இதழை நமது பாட்டி என விமர்சித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியிருக்கிறது.

முன்னதாக, அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழ் நமது அம்மா. இந்த பத்திரிகையில் வெளியான தன்னைப் பற்றிய விமர்சனத்தைக் குறிப்பிட்ட தினகரன் நமது பாட்டியில் வெளியான செய்திக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது எனக் கூறியிருந்தார்.

இதற்கு நமது அம்மாவில் கண்டனப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சில பகுதிகளை அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளனர்.

அந்த ட்வீட்களில், "மாண்புமிகு அம்மா தன் ரத்தம் சிந்தி,தன் உடல் நிலையைக் கூட பாராமல் உயிர் கொடுத்து பெற்ற வெற்றியை,18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை ஸ்டாலினோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு,தன் ஒருவருக்காக  இழக்க வைத்து, அம்மாவின் ஆட்சியையும் கழகத்தையும் அழிக்கத்துடிக்கும் தினகரனின் கனவு நிறைவேறாது.

மாண்புமிகு அம்மாவின் திருவுருவத்தை கிழித்து,அவர்கள் காத்து நின்ற கொடியை அவமதித்து,நமதுஅம்மா நாளிதழில் இருக்கும் அம்மாவின் திருப்பெயரை பாட்டி என்று பழித்துரைத்து,தன்னை 10 வருடம் அரசியலில் ஒதுக்கி வைத்தமைக்கு "அம்மா" அவர்கள் மறைந்த பிறகும் பழிவாங்க முற்படும் தினகரனே மன்னிப்பு கேள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close