[X] Close

2 கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கக் கூடாதா?- துரைமுருகன் கேள்வி


duraimurugan-about-stalin

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 10:21 am
  • அ+ அ-

இரு கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கினால் சதி என்று கூறுவதா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் நோய்த் தடுப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மாநில அரசு மிகவும் மெத்தனமாக உள்ளது. டெங்கு தவிர, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் என அனைத்து காய்ச்சல்களும் வருகின்றன.

பொதுமக்கள் நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரு கின்றனர். அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதே இந்த ஆட்சியில் கிடையாது. அது மழையாக இருந்தாலும், சட்டம் - ஒழுங்காக இருந்தாலும், சுகாதார மாக இருந்தாலும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதில்லை.

ஸ்டாலினும், தினகரனும் ஒரே ஹோட்டலில் தங்கியதாக பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இதைப் பார்க்கும்போது தமிழக அரசியல் இப்படி போய்விட்டதே என வருத்தமாக உள்ளது. எதிர்க் கட்சி தலைவர்களோ, வேறு கட்சிகளின் தலைவர்களோ ஒரே விமானத்தில் செல்லக் கூடாதா? ஒரே ஹோட்டலில் தங்கக் கூடாதா? அப்படி தங்கினால் உடனே சதி என்று கூறுவதா? அனைத்தும் வெறும் கற்பனையான விஷயங் கள் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close