[X] Close

போட்ட ட்வீட்டை நீக்கிய எச்.ராஜா!- அட்மின் வேலையா என கிண்டலடித்த நெட்டிசன்கள்


h-raja-deletes-tweets-amidst-netizens-reax

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Nov, 2018 10:00 am
  • அ+ அ-

பாஜக தேசிய செயலர் எச்.ராஜா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பட்டாசு கெடுபிடி வழக்கில் ஒருவர் கைது செய்யப்படதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். பின்னர், அதை சில நிமிடங்களிலேயே நீக்கினார்.

இதனையடுத்து அட்மின் சிக்கலா என எச்.ராஜாவை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்தனர்.

அவர் பதிவு செய்த ட்வீட்டில், "பிராமி விஜயன் பாதையில் கேஜ்ரிவால்" எனப் பதிவிட்டிருந்தார். இதில் நெட்டிசன்கள் இரண்டு தவற்றை சுட்டிக்காட்டினர்.

முதலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் என்பதற்கு பதிலாக பிராம்மி விஜயன் எனப் பதிவிட்டிருந்தார். இரண்டாவதாக டெல்லி தலைநகராக இருந்தாலும் யூனியன் பிரதேசம் என்பதால் அதன் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. டெல்லி காவல்துறையை ராஜா குறை கூறியிருப்பது மத்திய அரசை விமர்சிப்பதற்கு சமம்.

இது சுட்டிக்காட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த ட்வீட்டை நீக்கினார் எச்.ராஜா. ஆனால், அப்போதும் நெட்டிசன்கள் அவரை விட்டுவைக்கவில்லை அட்மினுக்கு சிக்கல் வருமோ என ட்வீட்டை நீக்கிவிட்டாரோ எனக் கிண்டலடித்தனர்.

ஏனெனில், எச்.ராஜா ட்விட்டரில் எதையாவது சொல்லிவிட்டு அது சர்ச்சையாகிவிட்டால் அதை நான் சொல்லவில்லை அட்மின் வேலை என்று சாக்கு சொல்வது வழக்கம். அதனாலேயே நெட்டிசன்கள் இது என்ன அட்மின் வேலையா எனக் கலாய்த்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close