மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்... அண்ணா பல்கலைக்கழகத்தில் பரபரப்பு!


சென்னை அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மர்ம நபர் மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது. இதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த மோப்பநாய் உதவியுடள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தேடுதல் வேட்டையில் இன்று இறங்கினார்.

வெடிகுண்டு

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸாரால் சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்று தெரிய வந்தது. இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து கோட்டூர்புரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x