[X] Close

மதரீதியான பாரபட்சம் கண்டிக்கத்தக்கது!- பட்டாசு கெடுபிடிக்கு எச்.ராஜா கண்டனம் 


h-raja-slams-tn-govt-over-crackers-issue

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Nov, 2018 08:24 am
  • அ+ அ-

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதில் மதரீதியான பாரபட்சம் கண்டிக்கத்தக்கது என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுவதில் மதரீதியான பாரபட்சம் கண்டிக்கத்தக்கது.முதலில் மசூதிகளில் உள்ள கூம்புக் குழாய்களை கழட்டிவிட்டு பின் வெடிவெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். தமிழக அரசின் பாரபட்சமற்ற தன்மைக்கு இது சவால்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

முன்னதாக, "சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களைக் கொண்டு பட்டாசுகளை உற்பத்திசெய்ய வேண்டும். வருங்காலத் தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யவேண்டும். தீபாவளி பண்டிகை யன்று இரவு 8 முதல் 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசு மேல்முறையீடு:

பட்டாசுகளை வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த 2 மணி நேரம் போதாது என்பதால் கூடுதலாக 2 மணி நேரம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. தீபாவளி அன்று 2 மணி நேரத்துக்கு மேல் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்க இயலாது. அந்த 2 மணி நேரத்தை தமிழகஅரசே தீர்மானித்துக் கொள்ள லாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தான் நேரம்:

இதனை ஏற்ற தமிழக அரசு,  தீபாவளி அன்று பட்டாசு வெடிப் பதற்கான நேரத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அன்று காலை 6 முதல் 7 மணி வரையும் இரவில் 7 முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பு களின் முன் அனுமதியுடன், திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் பொதுமக்கள் முயற்சிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close