3 நாட்களில் 3 சம்பவம்: ம.பி, டெல்லியைத் தொடர்ந்து குஜராத் விமானநிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது!


ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்துள்ளது

டெல்லியில் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சோகம் நீங்கும் முன் குஜராத்தில் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

இடிந்து விழுந்த டெல்லி விமான நிலையத்தின் முனையம் 1 மேற்கூரை

இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், மேற்கூரை இடிந்து பல கார்களில் விழுந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 3 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்துள்ளது

இந்த சோகம் நீங்கும் முன் குஜராத்தில் விமான நிலையத்தின் மேற்கூரை இன்று இடிந்து விழுந்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெய்த கனமழை காரணமாக குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கனமழையால் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் யாரும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமான நிலையம் ஜூலை 2023 இல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 3 நாட்களில் இடிந்து விழும் மூன்றாவது விமான நிலையம் இதுவாகும். டெல்லியில் இந்திரா காந்தி விமான நிலையம் கடந்த 28-ம் தேதி இடிந்து விழுந்தது. ஜூன் 27-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தற்போது குஜராத்தில் உள்ள ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x