நடிகர் கமல்ஹாசன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் பட புரமோசனுக்காக மலேசியா சென்றுள்ளனர். அங்கு நடிகர் கமல்ஹாசன், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.
இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்தும் இருவரும் உரையாடி மகிழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தனர்.