சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து...3 பேர் உயிரிழப்பு!


சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு தயாரிப்பு பணியில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை விபத்து (கோப்புப் படம்)

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இன்று அங்கு காலை ஒரு பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்து கொண்டிருந்த மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், வெடி விபத்தில் மூன்று அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளளனர். அத்துடன் பட்டாசு ஆலைக்குள் யாரும் சிக்கியுள்ளனரா என தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x