[X] Close

லேட்டா வருவோம்; கரெக்ட்டா அடிப்போம்; - ரஜினி ஸ்டைலில் ராஜேந்திர பாலாஜி


rajendira-balaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 13:15 pm
  • அ+ அ-

நாங்களும் லேட்டா வருவோம். கரெக்ட்டா அடிப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

பாஜகவுக்கு அதிமுக துணை போகிறது என்று பலரும் சொல்லிவருகிறார்கள். மாநிலத்துக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் பிரதமர் மோடியிடம்தான் கேட்கவேண்டும். மோடி என்ன வெளிநாட்டுப் பிரதமரா? மாநிலத்தின் தேவைகளை மோடியிடம்தானே கேட்கவேண்டும்?

20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது வரும் என்று தெரியாது. ஆனால் இப்போதே நாங்கள் தயாராகி வருகிறோம். எங்களுடைய இலக்கு 8 அல்ல. இருபது தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் எங்கள் இலக்கு.

ஒவ்வொரு கட்சியும் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று சொல்லும். அது அந்தந்தக் கட்சியினரின் நிலைப்பாடு. ஆனால் லேட்டா வந்தாலும் கரெக்ட்டா அடிப்போம். 20 தொகுதிகளிலும் ஜெயிப்போம்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close