[X] Close

எல்லா காய்ச்சலும் அதிமுக ஆட்சியில்தான் வருகிறது - துரைமுருகன்


duraimurugan

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 11:37 am
  • அ+ அ-

எல்லாக் காய்ச்சலும் அதிமுக ஆட்சியில்தான் வருகிறது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னையில் திமுக பொருளாளர் துரைமுருகன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் டிடிவி. தினகரனும் சந்தித்தார்கள் என்று அதிமுகவினர் சொல்லிவருகிறார்கள். இது முழுக்க முழுக்க கற்பனையே.

ஒரு எதிர்க்கட்சித் தலைவரும் வேறொரு கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்யக்கூடாதா? ஒரே விடுதியில் தங்கக் கூடாதா?

அதிமுக ஆட்சியில்தான் எல்லா காய்ச்சலும் வருகின்றன. முதலில் டெங்குக் காய்ச்சலையும் பன்றிக் காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டுவர அரசு முயற்சி செய்யட்டும்.

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close