[X] Close

மரகதலிங்கத்தை மாணிக்கவேலால்தான் காப்பாற்ற முடியும் - தமிழிசை ட்விட்


maragadhalingam-ponmanikavel

பொன்.மாணிக்கவேல்

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 11:23 am
  • அ+ அ-

உத்திரகோசமங்கை கோயிலில் உள்ள மரகத லிங்கத்தை காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேலால்தான் காப்பாற்ற முடியும் என தமிழிசை செளந்தர்ராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கை கோயிலில், மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள மரகதலிங்கத்தை திருட முயற்சிகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கோயில்களின் சிலைகளை ஆய்வு செய்து வருகிறார் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல்.

இந்த நிலையில், உத்திரகோச மங்கை கோயிலின் மரகதலிங்கத்தை பொன்.மாணிக்கவேலால்தான் காப்பாற்றமுடியும். எனவே அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மரகத லிங்கத்தை, மாணிக்கவேலால்தான் காப்பாற்ற முடியும். எனவே அவரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close