’இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் சிவகார்த்திகேயன் மறுத்திருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் கமல்ஹாசனுடைய ‘இந்தியன்2’ திரைப்படத்தின் டிரைய்லர் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் சித்தார்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கதைப்படி அவர்தான் இந்தியன் தாத்தா சேனாதிபதி பற்றி கதை சொல்லி அவரை மீண்டும் வர வைக்கிறார்.
சித்தார்த்துடைய இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனுக்குதான் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், தேதி பிரச்சினைகள் காரணமாக அதை மறுத்திருக்கிறார் சிவா.
மேலும், படத்தில் க்ளீன் ஷேவ்வில் வர வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததால், அடுத்தடுத்தப் படங்களுக்கான கண்டினியூட்டி மிஸ் ஆகும் என்ற விஷயத்தாலும் கனத்த மனதுடன் இந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த மனவருத்தத்தைப் போக்கவே கமலுடைய தயாரிப்பில் ‘அமரன்’ வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு போனதாகவும் தெரிகிறது. ‘இந்தியன்2’ படத்தில் தனக்கு பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவரிடம் நல்ல முறையில் பேசி நட்பை வளர்த்திருக்கிறார்.