டெல்லி விரைந்த ஆளுநர் ரவி... தமிழக அரசியலில் பரபரப்பு!


ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் சிபிஐ விசாரணை கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஆளுநர் ரவியிடம் மனு அளித்துள்ளனர்.

சென்னை விமான நிலையம்

இந்நிலையில் ஒரு நாள் பயணமாக திடீரென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். டெல்லி புறப்பட்ட அவருடன், ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஆளுநர் டெல்லிக்கு சென்றுள்ளார். இதனால் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி

டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆளுநர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் ஆளுநரின் பயணம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படாததால், இந்த பயணம் தனிப்பட்ட பயணமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை 8.30 மணி விமானத்தில் அவர் சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் டெல்லி திடீர் விஜயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x