‘தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் மீது ஆணையாக...’ - மயிலாடுதுறை எம்.பியாக சுதா பதவியேற்பு!


சுதா எம்.பி

தமிழ்க் கடவுள் முருகன் மீது ஆணையாக எனக் குறிப்பிட்டு மயிலாடுதுறை எம்.பியாக சுதா பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் அமர்வு நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் இடைக்கால சபாநாயகராக பர்தருஹரி மஹதாப் தேர்வு செய்யப்பட்டார். முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்.பி-யாக பதவியேற்றனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மக்களவைக்கு தேர்வான திமுக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழக திமுக கூட்டணி எம்.பி-க்கள் கையடக்க அரசியல் சாசன புத்தகத்தை தங்கள் கைகளில் வைத்து, உறுதி மொழி கூறி பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதில், அரசியல் சாசனத்தை கையில் ஏந்தியபடி தமிழில் பதவியேற்ற மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி-யான ஆர்.சுதா, தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் மீது உளமாற உறுதி கூறுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, தமிழ் மக்கள் வாழ்க, இந்தியாவின் நம்பிக்கைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்க என்று முழக்கமிட்டு பதவியேற்றுக் கொண்டார். மேலும், ஜோடோ, ஜோடோ... பாரத் ஜோடோ எனவும் அவர் முழக்கமிட்டார்.

x