'இந்தியன்2’ கமல்ஹாசன்... இப்போது நான் நிஜமாகவே தாத்தா!


’இந்தியன்2’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன்2'. படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

நிகழ்வில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "ஒரே படத்தை இரண்டாம் முறையாக இயக்குவது ஒரு சிலர் தான். இந்த வாய்ப்பு ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. அதனால், எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ’இந்தியன்’ முதல் பாகத்தின் டப்பிங் பணிகளின் போதே இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று சொன்னேன்.

’இந்தியன்2’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

இரண்டாம் பாகத்திற்கான கண்டெண்ட் கொடுத்து கொண்டிருக்கும் நல்ல, கெட்ட அரசியலுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்றி. நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா கலைஞர்கள் இப்போது இருந்திருக்க வேண்டும். இப்போது நான் நிஜமாகவே தாத்தா. 'இந்தியன்3' படமும் எடுத்திருக்கிறோம்.

‘இந்தியன்2’ படம் வெளிவர ஐந்தாறு வருடங்கள் ஆனதற்குக் காரணம் சில இயற்கை குளறுபடிகள். என்ன என்பது உங்களுக்கே தெரியும். அதில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த தயாரிப்பு நிறுவனம் லைகாவுக்கு நன்றி. 100% வேலை எப்படி செய்வது என்று அனிருத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார். எல்லோருமே சம்பளம் வாங்கி நடிப்பது போல இல்லாமல், சந்தோஷமாக நடித்திருக்கிறார்கள் என்பதில் பெருமை" என்றார்.

x