[X] Close

‘லிவிங் டு கெதர்’ உறவை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?- கமலை மடக்கிய மாணவர்கள்


kamal-answers-student-questions

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 08:24 am
  • அ+ அ-

மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான ஹெக்டேர் புதிய விவசாய நிலங்கள் உருவாக்கப்படுகின்றனர், தமிழகத்தில் அந்த நிலைக்கு எதிரான நிலை உள்ளதால் விவசாயிகள் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகின்றனர், என்று கமல் வேதனை தெரிவித்தார்.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்:

விவசாயிகள் தற்கொலை தடுக்க என்ன செய்வீர்கள்?

ஒன்றுமில்லை காற்றிருந்தால்தான் மூச்சுவிட முடியும், விவசாயம் இருந்தால்தானே அவர்கள் வாழமுடியும். விவசாய நிலத்தை அழித்து வெவ்வேறு தொழில் செய்வோம் என்று சொல்வது நியாயமான வாதமல்ல.

ஆலைகள் செய்வோம் என்று சொல்லும் பாரதிதான் பள்ளிச்சாலைகள் செய்வோம் என்கிறார். இரண்டையும் சமன் செய்யவேண்டும். பக்கத்து மாநிலத்தில் ரொம்ப தூரம் இல்லை காரில் போய்விடலாம், அங்கு 7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் 20 லட்சம் ஹெக்டேர்ஸ் புதிதாக விவசாயத்துக்கு உருவாக்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான ஒடிசாவில் 10 லட்சம் ஹெக்டேர் புதிய விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது.

அதற்கு நேர் எதிராக தமிழகமும் இன்னும் சில மாநிலங்களும் மாறிவருவதால்தான் புதிய நிலைமையைப்பார்த்து மிரண்டுபோகும் விவசாயிகள் சிலர் தற்கொலைச் செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். அதைமாற்றுவோம், மாற்றும் கூட்டத்தின் நடுவில் நான் நிற்கிறேன். அதை நம்புங்கள் மாற்றிக்காட்டுகிறேன்.

ஒரு வசனம் சொல்லுங்களேன்?

என்னுடைய வசனம் அல்ல, ஆசானாக ஏற்றுக்கொண்ட ஒருவரின் வசனத்தை சொல்கிறேன். சாக்ரடீஸ் அவரது சொன்னதன் தமிழாக்கம் அது. “அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடையவேண்டாம், எவர் சொன்னாலும் அதை உன் பகுத்தறிவால் எண்ணிப்பார்ப்பாய்” அப்படிப்பார்த்ததால்தான் சிலை வடிக்கும் இந்த சிற்பி சிந்தனைச் சிற்பியானேன்.

மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளீர்கள், உங்களை எது அதிகம் பாதிக்கும் விஷயம்?

மக்களுக்காக வந்துள்ளது உண்மை என்றாலும் எனக்காகவும் நான் வந்துள்ளேன். என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்துத்தான் வந்துள்ளேன்.

உங்களை பாதிக்கும் விஷயமாக எதைப்பார்க்கிறீர்கள்?

என்னை பாதிக்கும் விஷயம் எதை என்று கேட்கிறீர்கள்? இவ்வளவு சப்போர்ட்டும் சந்தோஷமும் கையைத் தூக்கிவிட்டு வேளை வரும்போது நீங்கள் வரவேண்டிய இடத்திற்கு வராமல் வீட்டில் தங்கிவிட்டால் அதுதான் பெரிய பாதிக்கும் விஷயம்.

இந்த மாற்றத்தை கொண்டு வரவேண்டுமானால் நீங்கள் முக்கியமான அந்த 100 மீட்டரைக்கடந்து வாக்குச் சாவடிக்கு வரவேண்டும், அங்கும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பாராமால் சாக்ரடீஸ் வசனத்தைச் சிந்தனையில் வைக்க வேண்டும்.

‘லிவிங் டு கெதர்’ உறவை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?

லிவிங் டு  கெதரைத்தான் நாம் எல்லோரும் செய்துக்கொண்டிருக்கிறோம். நான் இந்த உலகம் முழுதும் உள்ள 600 கோடி மக்கள் லிவிங் டூ கெதராக வாழ்வதை ஆதரிக்கிறேன்.

இவ்வாறு கமல் பதிலளித்து பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close