[X] Close

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு இருக்கும்போது, அரசியலுக்கு வரும் உங்களுக்கெல்லாம் தேர்வு கிடையாதா?- கமலை அசத்திய மாணவர்கள்


kamal-answers-students-questions

  • kamadenu
  • Posted: 04 Nov, 2018 07:58 am
  • அ+ அ-

ஐஏஎஸ், ஐபிஎஸ் தயார் செய்ய தேர்வு இருக்கும்போது முதல்வர் கனவுடன் வரும் உங்களுக்கு ஏன் தேர்வில்லை என மாணவர்கள் அதிரடியாக கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த பதில்:

பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று கூறுகிறார்கள், ஆனால் பெண்களுக்கு இன்றும் பாதுகாப்பு இல்லை. ஆட்சிக்கு வந்தால் என்ன பாதுகாப்பு அளிப்பீர்கள்?

நான் முன்னரே சொன்னேன் என்னுடைய செக்யூரிட்டிகார்டு உருவாகிக்கொண்டிருக்கிறது. அவர்கள் அதை பார்த்துக்கொள்வார்கள். (மாணவர்களை சுட்டிக்காட்டுகிறார்) இந்த நம்பிக்கைக்கு நீங்கள் நன்றி சொல்லும்விதம் எப்படி என்றால் அந்த வாக்குறுதியை நீங்கள் கொடுக்கவேண்டும்.

ஆமாம் உட்கார்ந்திருக்கிறோம் எப்போது வரச்சொன்னாலும் வருகிறோம் என்று மாணவர்கள் நீங்கள் சொல்லணும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதற்கென ஒரு தேர்வு உள்ளது, ஆனால் அரசியலில் பொறுப்புக்கு வருபவர்கள் பிரபலமான நபராக இருந்து சிஎம் ஆகிவிடுகிறார்கள்? அவர்களும் ஏதாவது தேர்வு எழுதவேண்டும் அல்லவா?

சரியான கேள்வி, அந்த தேர்வுக்கான கேள்வித்தாளைத்தான் நான் தயார் செய்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதற்கான ஒரு பதில்தான் இது.

வேறு யாரும் இதைச் செய்கிறார்களா? எனக்குத்தெரியாது.

தைரியமாக கூட்டத்தில் வந்து கேள்வி கேளுங்கள் என்றிஉ நின்று இந்த அக்னிப்பரிட்சையில் வென்றபிறகு நீங்கள் என் கற்பைச் சோதிக்க முடியாது.

அரசியலில் வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருப்பதாக கருதுகிறீர்கள்?

நேர்மை, அது இருப்பதாக கருதுகிறேன்.

முழுநேர அரசியல்வாதி, பார்ட்டைம் அரசியல்வாதி என்ன வித்தியாசம்?

முழுநேர அரசியல்வாதி எப்போதும் அதைப்பற்றியே சிந்திப்பார்கள், பார்ட்டைம் அரசியல்வாதி அடிக்கடி சுவிட்சர்லாந்துக்குச் போய்விட்டு வருவார்கள்.

மக்கள் நீதிமய்யம் என்ற பெயர் வைக்க காரணம்?

மக்களுக்கான நீதி வேண்டும் என்பது மதுரை எரிந்தபோது அதையும் தாண்டி அனைவரும் எதிர்ப்பார்க்கும் விஷயம். இங்கு நீதிக்கட்சி என்று ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக திராவிடக்கட்சிகள் வந்தன. முன்னோர்களின் தாக்கமாக இருக்கலாம். இன்னும் ஒரு விஷயம் என் மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கோபத்திலிருந்து வந்தது.

இவ்வாறு கமல் பதில் அளித்தார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close