துப்பாக்கியால் சுட்டு மனைவியை கொலை செய்த கணவன்... அடுத்து செய்த அதிர்ச்சி சம்பவம்!


துப்பாக்கியால் சுட்டுக் கொலை

குடும்பத் தகராறில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவர், தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், பேலூர் தாலுகாவில் உள்ள தொட்டசலவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ்(50). இவரது மனைவி ஜாஜி(45). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அன்றாடம் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குழந்தைகளை வேறு இடத்தில் இருந்து படிக்க வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சண்டை முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த ஹரீஷ், திடீரென துப்பாக்கியை எடுத்து வந்து அவரது மனைவி ஜாஜியை சுட்டார். இதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஜாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின் ஹரீஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரேஹள்ளி காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

துப்பாக்கியால் சுடப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஜாஜி உடலையும், தூக்கில் தொங்கிய ஹரீஷ் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறில் மனைவியை சுட்டுக் கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து அரேஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியைச் சுட்டுக்கொலை செய்து விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x