வயதான முதியவர்களுக்கு எச்சரிக்கை... இன்று முதல் 4 நாட்களுக்கு 5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!


வெப்ப அலை

தமிழ்நாட்டில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையால் இதமான சூழ்நிலை நிலவி வந்தது.

கோடைமழை

இந்த நிலையில் தென் மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் நீர், நிலைகள் நிரம்பி வந்தன.

ஆனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் மீண்டும் வெப்பத்தின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் செல்வோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வயதான முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில் இன்று முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதாவது, 3 டிகிரி பாரன்ஹீட் முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பம்

ஆனாலும், தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

x