சிக்கிமின் மாங்கன் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் மாயமாகியுள்ளனர். பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளன.
சிக்கிம் மாநிலம், மாங்கன் மாவட்டத்தில் இடைவிடாத மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கிய 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலச்சரிவுகளால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும், கன மழை காரணமாக பல வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல், மின்சார கம்பங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாங்கனின் பக்செப் பகுதியில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும்ரங்ராங் அருகே உள்ள அம்பிதாங்கில் மூன்று பேரும், பக்செப்பில் இருவரும் இயற்கை சீற்றத்தில் காணாமல் போயுள்ளனர்.
கெய்தாங்கில் 3 வீடுகள் சேதமடைந்த. பென்டோக் அருகே உள்ள நம்பதாங்கில் பல வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக பிரிங்போங் போலீஸ் அவுட்போஸ்ட் அருகிலுள்ள மற்றொரு இடத்துக்கு மாற்றப்பட்டது. சங்கலானில் ஒரு பாலத்தின் அடித்தளம் சேதமடைந்தது.
மாங்கனுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களுடன் மாநில பேரிடர் மீட்பு குழுவை அனுப்பு வைக்குமாறு மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு சிக்கிமில் மொபைல் நெட்வொர்க் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அருணாச்சல் பிரதேசத்தில், பாஜக சார்பில் பெமா காண்டு முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க அம்மாநிலத்துக்கு சென்றுள்ள சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், மாங்கன் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பிற துறைகளின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலச்சரிவு, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை விரைவுப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதையும் வாசிக்கலாமே...
பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!