நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புத் தள்ளிப் போயுள்ளது. இதற்கான காரணம் ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தை முடித்துள்ளார். இதனை அடுத்து இவரது 171வது படமாக ‘கூலி’ உருவாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே தொடங்க இருந்த இந்தப் படம் தேர்தல் மற்றும் ’வேட்டையன்’ படப்பிடிப்பு முடிவடையாததால் தள்ளிப் போனது.
’வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்த நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி மற்றும் இமயமலை பயணம் சென்று திரும்பினார். வந்த உடனேயே பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார். நாளை மறுநாள் ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் ரஜினி.
ரஜினியின் இந்தப் பயணத் திட்டங்களால் இன்று தொடங்க இருந்த ‘கூலி’ படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குத் தள்ளிப் போகிறதாம். மேலும், படத்தின் முன் தயாரிப்புப் பணிகளுக்கும் இன்னும் சில காலம் தேவைப்படுகிறது என்கிறது படக்குழு.
படப்பிடிப்பு இன்று தொடங்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி ஏமாற்றம் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஷோபனா உள்ளிட்டப் பலர் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...