ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தோம் என்று உயிர் பிழைத்த பக்தர் கூறியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசியிலிருந்து நேற்று மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ஷிவ் கோரி கோயிலில் இருந்து கத்ராவுக்குச் செல்லும் பேருந்து ரஜோர மாவட்டத்தின் எல்லையான ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியை அடைந்த போது இந்தப் பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர் கூறுகையில், " பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதை நான் பார்த்தேன். பேருந்து பள்ளத்தில் விழுந்த பிறகும் 20 நிமிடம் துப்பாக்கியால் சுட்டனர். எங்கள் அனைவரையும் கொல்லும் நோக்கத்தில் அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அனைவரையும் கொல்ல வேண்டும் என்று அவர்கள் கத்திக்கொண்டே சுட்டனர். இதனால் நாங்கள் அனைவரும் இறந்து விட்டோம் என்று அவர்கள் நம்புவதற்காக இறந்தது போல் நடித்தோம்.
பேருந்தில் குழந்தைகளும், பெண்களும் இருந்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் அனைவரும் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடந்த 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறையும் உள்ளூர் மக்களும் எங்களைக் காப்பாற்ற வந்தனர். துப்பாக்கித் தோட்டாவால் காயமடைந்த பேருந்தின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது" என்றார்.
இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையும் வாசிக்கலாமே...
பற்றி எரிந்த பாஜக அலுவலகம்... இந்தூரில் பரபரப்பு!
சில தேர்தல்கள் வரைபடத்தையே மாற்றுகின்றன... அகிலேஷ் யாதவ் வெளியிட்ட படங்களால் பரபரப்பு!