நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு 800 பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளது தனியார் நிறுவனம் ஒன்று.
நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இரண்டாவது திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதனை ஒட்டி துபாயில் உள்ள கேஎஸ்ஆர் குளோபல் குரூப் சார்பில் அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜை செய்து, தொழிலாளர் விடுதியிலிருக்கும் 800 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கினார்கள்.
இந்நிகழ்வை கேஎஸ்ஆர் குளோபல் குரூப் துபாய் காரமா காரசாரம் நிறுவனர்கள் கோபி மற்றும் ஜெகதீஷ் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விக்னேஷ்சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த 2022ல் ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பிறகு வாடகைத்தாய் முறை மூலம் உயிர்- உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். குழந்தைகள் மற்றும் பல்வேறு பிசினஸில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார்.
இரண்டாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடி இருக்கிறார் நயன். அதிலும் விக்னேஷ்சிவனை தூக்கச் சொல்லி இவர் செய்த குறும்பு வீடியோவும் இணையத்தில் வைரலானது.
'உன்னைத் திருமணம் செய்தது என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயம். நம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதில் கடவுள் நம்முடன் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...