நடிகை அமலாபாலுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தைப் பிறக்க இருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் தொழிலதிபர் ஜெகத் தேசாய் என்பவரை காதல் திருமணம் செய்தார் நடிகை அமலாபால். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பெற்றோர் ஆன செய்தியை அறிவித்தது இந்த ஜோடி.
இப்போது ஒன்பதாவது மாதத்தை எட்டியிருக்கும் அமலாபால் தன் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இன்னும் சில தினங்களில் குழந்தைப் பிறக்க இருக்கும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
’லேபர்ஹூட்டில் இன்று அழகான நாள்’ என்ற வாசகம் பொறித்திருக்கும் டீஷர்ட் அணிந்து, மருத்துவமனை அறையில் அமலாபால் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரது கணவர் ஜெகத் பகிர்ந்துள்ளார். அமலாவும் இதை ரீஷேர் செய்து மகிழ்ந்திருக்கிறார். ‘நல்லபடியாக குழந்தைப் பிறக்க வேண்டும்’ என அவரது ரசிகர்கள் அமலாவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...