ஜம்மு - காஷ்மீரில் பேருந்து மீது தாக்குதல் நடத்தியது இரண்டு பயங்கரவாதிகள் தான் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர் அவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வனப்பகுதியில் ஆளில்லா விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசியிலிருந்து நேற்று மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ஷிவ் கோரி கோயிலில் இருந்து கத்ராவுக்குச் செல்லும் பேருந்து ரஜோர மாவட்டத்தின் எல்லையான ரியாசி மாவட்டத்தின் பூனி பகுதியை அடைந்த போது இந்தப் பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக ரியாசி மூத்த காவல் கண்காணிப்பாளர்(எஸ்எஸ்பி) மோஹிதா சர்மா இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, நேற்று மாலை 06.10 மணியளவில் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், ஒன்பது பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 33 பேர் காயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ள ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை 2 பயங்கவாதிகள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அறிந்ததும், நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்ட பேருந்தில் பயணித்தவர்களை மீட்கத் தொடங்கினோம். காயமடைந்தவர்களிடம் கேட்டபோது, பயங்கரவாதிகளில் ஒருவன் பேருந்து ஓட்டுநரின் தலையில் சுட்டுக் கொன்றதாக எங்களிடம் கூறினார்கள்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது. அப்போதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்தில் உள்ளனர். வனப்பகுதியில் ஆளில்லா விமானங்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. என்றார்.
இதையும் வாசிக்கலாமே...