மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர், விவசாயிகளுக்கான 17வது தவணை நிதி உதவியை விடுவிக்கும் கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதல் கையெழுத்திட்டார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் 71 அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள நரேந்திர மோடி, இன்று தனது முதல் நடவடிக்கையாக விவசாயிகளுக்கான ஆதரவு திட்டமான, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துக்கான, நிதியை விடுவிக்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் இந்த திட்டத்தின் 17வது தவணை நிதியான சுமார் ரூ.20,000 கோடியை சுமார் 9.3 கோடி விவசாயிகள் பெறுவர்.
கோப்பில் கையெழுத்திட்டப் பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், “எனது அரசு விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
அதனால்தான் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்திடுவதற்கு, விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தும் கோப்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. வரவருக்கும் காலங்களில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்துக்காகவும் மேலும் பல நற்பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...