[X] Close

மக்களுக்கு அதிமுக அடிமை – ராஜேந்திர பாலாஜி


rajendirabalaji

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 21:24 pm
  • அ+ அ-

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை. மக்களுக்குத்தான் அடிமை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததாவது:

பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் பாஜகவுக்கு அடிமை இல்லை. மக்களுக்குத்தான் அடிமை. அதிமுக அமைச்சர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். திமுக தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக இப்படி சொல்லிவருகிறார்.

பாஜகவுக்கு நாங்கள் அடிமை என்று சொல்லுகிறார்களே. அப்படி அடிமையாக இருந்தால், 23 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியிருப்போமா?

20 தொகுதிகள் குறித்து ஒவ்வொருவரும் அதிமுகவை தாக்கிப் பேசி வருகிறார்கள். இந்த 20 தொகுதிகளிலும் யார் டெபாசிட் இழப்பார்கள், யார் வெற்றியைப் பெறுவார்கள் என்பது அப்போது தெரியும்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close