மோடி 3.0 அமைச்சரவை: நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானிக்கு இடம் உண்டா?


ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன்.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நாளை (ஜூன் 9) பதவியேற்கிறார். இதற்கிடையில் அமைச்சர் பதவி யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கோ, காங்கிரஸ் கூட்டணிக்கோ அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஜேடியு (12), ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா (7), சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) (5) ஆகிய கட்சிகளும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க ஆதரவு அளித்துள்ளன.

பிரதமர் மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இக்கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக நாளை பதவியேற்கிறார். அவருடன் கேபினட் அந்தஸ்து உள்ள அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள்

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் முதல் தலைவர் மோடி என்பதும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா (குஜராத்), ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), நிதின் கட்கரி (மகாராஷ்டிரா), நிர்மலா சீதாராமன் (மாநிலங்களவை), ஜெய் சங்கர் (மாநிலங்களவை), சிவராஜ் சிங் சவுகான் (மத்திய பிரதேசம்), பியூஷ் கோயல் (மகாராஷ்டிரா), ஸ்மிருதி இரானி (மாநிலங்களவை), ஜோதிராதித்ய சிந்தியா (மத்தியப் பிரதேசம்), அர்ஜுன் முண்டா (ஜார்க்கண்ட்), ஹர்தீப்சிங் பூரி (மாநிலங்களவை), அனுராக் தாக்கூர் (இமாச்சலப் பிரதேசம்), பரஷோத்தம் ரூபாலா (மாநிலங்களவை), பிரஹலாத் ஜோஷி (கர்நாடகா), கிரிராஜ் சிங் (பீகார்), பன்சூரி ஸ்வராஜ் (டெல்லி), கஜேந்திர சிங் ஷெகாவத் (ராஜஸ்தான்), பூபேந்திர யாதவ் (ராஜஸ்தான்) ஆகியோர் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களான சிராக் பாஸ்வான் (எல்ஜேபி-பீகார்), லாலன் சிங் (ஜேடியு-பீகார்), எச்.டி குமாரசாமி (ஜேடிஎஸ்-கர்நாடகா), அனுப்ரியா படேல் (அப்னா தளம்-உத்தரப் பிரதேசம்), ஜிதன் ராம் மஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா- பீகார்) ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x