ஆமை வேகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள்... காரணம் இது தான்!


வந்தே பாரத் ரயில்

160 கி.மீ வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் தற்போது எந்த வேகத்தில் இயக்கப்படுகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் எனவும் கூறப்பட்டது.

வந்தே பாரத் ரயில்

இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரியவந்திருக்கிறது

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21-ம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கிலோமீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24-ம் நிதியாண்டில் இது 76.25 கிலோமீட்டராக வேகம் குறைந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று சொல்லப்பட்ட இந்த ரயில் தற்போது அதற்குப் பாதி அளவு வேகத்திலேயே இயக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேகமாக செல்வதற்கான வசதிகள் இல்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், இந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்

வந்தே பாரத் ரயில்களை 160 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றாலும், பெரும்பாலான வழித்தடங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் மட்டும் அதை விட அதிக வேகத்தில் இயக்கப்படுகிறது.

x