நரேந்திர மோடிக்கு திடீரென வாழ்த்து சொன்ன எடப்பாடி பழனிசாமி: காரணம் இதுதான்!


பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து செயல்பட்டது. மோடியின் கடந்த ஆட்சிகாலத்தில் பல்வேறு முக்கியத்திட்டங்களுக்கு அதிமுக தனது ஆதரவை அளித்து வந்தது. இந்த சூழலில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகளால், இந்த கூட்டணி உடைந்தது. எனவே நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக தனித்தனியாக அணி அமைத்து போட்டியிட்டன.

இந்த தேர்தலில் அதிமுக, பாஜக அணிகள் இரண்டுமே ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. திமுக கூட்டணி 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றிபெற்றது. வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் ஒட்டுமொத்தமாக அதிமுக 2ம் இடம் பிடித்தாலும், 10 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. எனவே கடந்த சில நாட்களாக அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இந்த சூழலில் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், என்டிஏ தலைவராக நரேந்திர மோடியை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிய, அனைவரும் அதை வழிமொழிய மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி. பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் (ஜூன் 9) மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது. மோடியுடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

மத்திய அமைச்சராகும் அண்ணாமலை... தயாராகும் பட்டியல்!

x