சின்னத்திரை மற்றும் பெரியதிரையில் துணை நடிகையாக நடித்து வந்தவர் நடிகை விஜயகுமாரி. இவர் புற்றுநோய் பாதிப்பால் காலமாகியுள்ளது திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டப் பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இன்னும் சிலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டு ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு சென்றிருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார் துணை நடிகை விஜயகுமாரி.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் நடிப்புத் துறை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை, வளசரவாக்கத்தில் தங்கி இருந்து துணை நடிகையாக பெரிய திரையிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது மூன்றாவது நிலையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
ஆனால், சிகிச்சை பலனில்லாத நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா? - சத்யபிரதா சாஹு பதில்!