ஒரே நாளில் தங்கம் விலை ஒரே சவரனுக்கு ரூ.600 உயர்வு... மக்கள் அதிர்ச்சி!


தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை ஒரு சவரன் 55 ஆயிரம் ரூபாயை கடந்து இருந்தது. இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகள் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

தங்கம் விலை உயர்வு

நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 75 அதிகரித்து 6,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 600 ரூபாய் விலை உயர்ந்து 54 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

இதே போல் வெள்ளியின் விலை இன்று ஒரு ரூபாய் 20 பைசா உயர்ந்துள்ளது. நேற்று 96 ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 98 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

x