மீண்டும் காதல் பறவைகளாக மாறிய ப்ரியா- அட்லி ஜோடி... கலக்கல் போட்டோஷூட்!


ப்ரியா- அட்லி

இயக்குநர் அட்லி குமார் தனது மனைவி ப்ரியாவுடன் கலக்கலான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

’ஜவான்’ இயக்குநர் அட்லி தனது காதல் மனைவி ப்ரியாவுடன் அடிக்கடி போட்டோஷூட் செய்து சமூகவலைதளத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவை ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகும்.

இப்போது ப்ரியாவுடன் சிவப்பு- வெள்ளை நிற உடையில் செம ரொமாண்டிக்கான ஃபோட்டோஷூட் நடத்தி இருக்கிறார். இந்த கலக்கல் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் அள்ளித் தெறிக்க விட்டு வருகின்றனர். பாலிவுட்டில் ‘ஜவான்’ படம் மூலம் இயக்குநராக எண்ட்ரி கொடுத்தார் அட்லி.

முதல் படத்திலேயே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படமெடுத்தவர் ஆயிரம் கோடி வசூலை கடந்து அசத்தினார். இந்தப் படத்தை அடுத்து தனது ஆறாவது படத்திற்கான திரைக்கதைப் பணியில் பிஸியாக உள்ளார்.

இது ‘ஜவான்2’ படத்திற்கான கதையா அல்லது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணையப் போகிறாரா என்பது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. தன் மீதிருந்த நெகட்டிவ் விமர்சனங்களைத் தவிடு பொடியாக்கி, பாலிவுட்டின் முதல் படத்திலேயே தவிர்க்க முடியாத இயக்குநராகி இருக்கும் அட்லியின் அடுத்தப் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

x