நடிகர் சூர்யாவின் ‘சூர்யா44’ படத்தின் அப்டேட் இந்த மாத இறுதியிலும், இதற்கடுத்து சூர்யாவின் பிறந்தநாளன்றும் என அடுத்தடுத்து கொடுக்க இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.
நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தை முடித்துவிட்டு ‘சூர்யா 44’ படத்தில் பிஸியாக இருக்கிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு அந்தமானில் தொடங்கியது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு இங்குதான் படப்பிடிப்பு நடக்கிறது. ‘துப்பாக்கி’, ‘ஜவான்’ படங்களில் பணிபுரிந்த கீசா காம்பக்டீ மாஸ்டர்தான் படத்திற்கு ஆக்ஷன் கோரியோகிராஃபர். அந்தமானின் முதல் ஷெட்யூலில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள்தான் படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த ஷெட்யூல் முடித்து பின்பு அடுத்து சென்னையில்தான் படமாக்க இருக்கிறார்களாம். முதல் ஷெட்யூல் முடித்த கையோடு படத்தின் டைட்டில் இந்த மாதம் இறுதியிலும் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 22 அன்று முதல் பார்வையும் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!
ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!
தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!
எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!