’ஜெயிலர்2’ படத்தில் ரஜினியுடன் இணைந்த மாஸ் ஹீரோ... அப்போ சம்பவம் ரெடி!


ஜெயிலர்

’ஜெயிலர்2’ படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தெலுங்கு மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா இணைந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘ஜெயிலர்’. விமர்சன ரீதியாக இந்தப் படம் சுமாராக இருந்தாலும் வசூல் ரீதியாக அதிரடி கிளப்பியது. இதன் இரண்டாம் பாகமும் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளை நெல்சன் திலீப்குமார் தற்போது தொடங்கி இருக்கிறார்.

ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா

பான் இந்தியா படமாக முதல் பாகம் உருவாகி இருந்ததால் நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் இவர்களுக்கான மாஸ் காட்சிகளும் படத்திற்கான ப்ளஸாக அமைந்தது. இதனால், இரண்டாம் பாகத்திலும் இதுபோல மற்ற மொழி மாஸ் ஹீரோக்களை களமிறக்க நெல்சன் முடிவு செய்திருக்கிறாராம்.

அதன்படி, தெலுங்கு மாஸ் ஹீரோ நந்தமுரி பாலகிருஷ்ணா ‘ஜெயிலர்2’ படத்தில் ரஜினியுடன் கூட்டணி சேர இருக்கிறாராம். இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறார் நெல்சன். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ளார். இதற்கடுத்ததாக, லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படப்பிடிப்பில் வரும் ஜூன் 10ம் தேதி முதல் கலந்து கொள்ள உள்ளார். இந்த படப்பிடிப்பை முடித்தப் பின்னரே ‘ஜெயிலர்2’வில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் இதன் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

x