காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேர் இருந்தும் பாஜக முன்னிலை... சிக்கபள்ளாபூர் தொகுதி நிலவரம்!


டாக்டர் கே.சுதாகர்

7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ள சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் டாக்டர் கே.சுதாகர் 80,766 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் கே.சுதாகர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ரக்ஷா ராமையா போட்டியிட்டார்.

ரக்ஷா ராமையா

சிக்கபள்ளாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 19,81,347 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 9,83,775 ஆண் வாக்காளர்களும், 9,97,306 பெண் வாக்காளர்களும், 266 இதர வாக்காளர்களும் உள்ளனர். இந்த மக்களவைத் தேர்தலில் 15,25,717 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 7,66,348 ஆண் வாக்காளர்கள், 7,59,275 பெண் வாக்காளர்கள், 94 இதர வாக்காளர்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

சிக்கபள்ளாப்பூர்

சிக்கபள்ளாப்பூர் மக்களவைத் தொகுதி பொதுத் தொகுதியாகும். கௌரிபிதனூர், பாகேபள்ளி,, பெங்களூர் ஊரக மாவட்டத்தில் உள்ள ஹோஸ்கோட்,தேவனஹள்ளி, தொட்டபள்ளாப்பூர், நெலமங்கலாப் பேரவைத் தொகுதி, நெலமங்கலாப் பேரவைத் தொகுதி ஆதி தாலுகா ராமநகர் மாவட்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஆனால், மக்களவைத் தேர்தல் பாஜக வேட்பாளர் டாக்டர் கே.சுதாகர் காங்கிரஸ் வேட்பாளரை விட 80,776 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இதன்படி கே.சுதாகர் 4,19,118 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ரக்ஷா ராமையா 3,38,342 வாக்குகளும் பெற்றுள்ளனர். டாக்டர் கே.சுதாகரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சிக்கபள்ளாபூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

x