விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய் பிரபாகரன் சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இன்று காலை தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியதிலிருந்து மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றார்.
மதியம் 12 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைக் கடந்து சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் பிரபாகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாவது இடத்தில் மாணிக்கம் தாகூர் ஒரு லட்சத்து 6 ஆயிரம் வாக்குகளுடனும், மூன்றாவது இடத்தில் ராதிகா சரத்குமாரும் உள்ளனர். ராதிகா சரத்குமார் சுமார் 41, 000 வாக்குகள் மட்டுமே பெற்று 71 ஆயிரம் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதே போல் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சுமார் 35 ஆயிரம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 27 ஆயிரம் வாக்குகளுடன் 3வது இடத்திலும் உள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு 1 லட்சத்து 16 ஆயிரம் வாக்குகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனும், 3வது இடத்தில் பாஜக வேட்பாளர் பாரிவேந்தரும் உள்ளனர்.