ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியை விட 19,933 வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கி உள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் நவாஸ் கனி 44,715 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 24,782 வாக்குகளுடன் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 8,154 வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். இதனிடையே இந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பன்னீர்செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
முதல் சுற்று முடிவில் ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் 148 வாக்குகளும், ஒச்சதேவர் மகன் பன்னீர்செல்வம் 27 வாக்குகளும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர்செல்வம் 79 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதே போல், ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம் 56 வாக்குகளும், மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் 101 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...