ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரோஜா 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் உள்ள 175 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சி 120 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் மட்டுமே தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியில் இருந்த பலரும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அமைச்சர் ரோஜா நகரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி பார்த்து சார்பில் கலி பானு பிரகாஷ் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி 12 ஆயிரம் வாக்குகள் பெற்று ரோஜாவை காட்டிலும் 5,640 வாக்குகள் அதிகம் பெற்று பானு பிரகாஷ் முன்னிலை வகிக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...