மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க எத்தனை தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்த தேர்தலில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகள் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் என்பதை உணர்த்தும் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முடிவுகளை அறிய உலக நாடுகள் முழுவதும் ஆவலாக உள்ளன.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த மக்களவை தேர்தலுடன் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவுகளும் ஒருசேர நடைபெற்றன. இவற்றுடன் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்படுகின்றன.
மக்களவை தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்படியென்றால் என்ன என்பதை வாக்காளர்களில் எளிதில் புரிந்து கொள்ளலாம். மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. இதில், 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் பெருபான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார். மற்ற கட்சிகளின் ஆதரவோடு தனிப்பெரும் கட்சி ஆட்சி அமைக்க முயலலாம்.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை தனிப்பெரும் கட்சி திரட்ட முடியாவிட்டால் அதற்கு அடுத்தபடியாக தனிப்பெரும் கூட்டணியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் அழைப்பு விடுப்பார். ஆனால். எந்தக் கட்சியாலும் எந்த கூட்டணியாலும் பெரும்பான்மை நிரூபிக்க முடியாவிட்டால், மீண்டும் தேர்தலை நடத்தும் முடிவை குடியரசுத் தலைவர் எடுப்பார்.