வாராணசி தொகுதியில் ஆரம்ப சுற்றுகளில் பின்னடவைச் சந்தித்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது மீண்டும் முன்னிலை பெறத் துவங்கியுள்ளார்.
வாராணசி தொகுதியில் பாஜக சார்பில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராஜ் போட்டியிடுகிறார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே அஜய் ராய் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். 3 வது சுற்று முடிவின் போது பிரதமர் நரேந்திர மோடியை விட அவர் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் அஜய் ராயை பின்னுக்கு தள்ளி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை பெற்றுள்ளார். தற்போது 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நரேந்திர மோடி முன்னிலையில் இருக்கிறார்.
இன்னும் பல சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் இந்த எண்ணிக்கை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் பாஜக 285 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 225க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...