அருணாசலப் பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி... வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி!


பிரதமர் நரேந்திர மோடி

அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அருணாசலப் பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் பத்து பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள 60 சட்டப்பேரவைகளில் 50 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பாஜக 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக

காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. என்பிபி கட்சி 5 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் தாண்டி வெற்றி பெற்றதால் அருணாசலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

இதனால் அருணாசலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்த மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 இடங்களில் வென்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தெளிவான முடிவை மக்கள் வழங்கியுள்ளனர். மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக்காக பாஜக இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்" என்று பதிவிட்டுள்ளார்.

x