ஆட்சியைக் கைப்பற்றுவது பாஜகவா? இந்தியா கூட்டணியா? - வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு!


மோடி மற்றும் ராகுல்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் சொல்லப்பட்டுள்ளது.

ஏப்ரல் 19 அன்று முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கிய மக்களவைத் தேர்தலின் இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடைபெறுகின்றன. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சூழலில், இன்று மாலை முதல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தற்போது வெளியாகியுள்ள எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளின்படி, என்டிடிவி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 365 இடங்களைப் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 142 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 36 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு

இண்டியா நியூஸ் டி டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 371 இடங்களைப் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 125 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 47 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 362-392 இடங்களைப் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 141 - 161 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 10 - 20 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி - பிரதமர் மோடி

ரிபப்ளிக் பாரத் மேட்ரைஸ் வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 353 - 368 இடங்களைப் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 118 - 133 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 43 - 48 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 359 இடங்களைப் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 154 இடங்களைப் பெறும் என்றும், இதரக்கட்சிகள் 30 இடங்களில் வெல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

x