[X] Close

தீபாவளியன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பில்லை!- தமிழ்நாடு வெதர்மேன்


as-of-now-not-much-rains-seen-on-diwali-day-for-the-state

  • kamadenu
  • Posted: 02 Nov, 2018 12:31 pm
  • அ+ அ-

தீபாவளிப் பண்டிகையன்று தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆர்வலரும் பதிவருமான பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூலில், "'மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருக்கும் தாழ்வுப்பகுதி கீழாக கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும். அதன்பின் மழை மெல்ல நகர்ந்து, தென் மாவட்டங்களை நோக்கி நகரும்.

இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை இருக்கும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக ஒருநாள் மழையை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்கா மற்றும் இந்திய வானிலை மாடல்கள் மட்டுமே மழை குறித்த வலுவான தகவல்களை அளிப்பவை. மற்றவற்றை குறிப்பிடமுடியாது. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வரும்நாட்களில் மழை குறித்த தெளிவான பார்வை கிடைத்துவிடும். ஆதலால், தீபாவளிப் பண்டிகையன்று தமிழகத்தில் பெரும்பாலும் பெரிய அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close